மாத்தறை, கிரிந்த, பவுல்வெல் பிரதேசத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள “மங்கள சமரவீர பிரதேசம்” என்ற பெயரை மாற்றுவதற்காக கிரிந்த பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த யோசனைக்கு ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் பெறப்பட்டன. அதன்படி இந்த யோசனை அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இந்த விடயம் தொடர்பில் கிரிந்த பிரதேச சபை தலைவர் ஆளுநருக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பவுல்வெல் பிரதேசத்திலுள்ள மக்கள் “மங்கள சமரவீர பிரதேசம்” என்ற பெயரை மாற்றுமாறு பிரதேச சபைத் தலைவரிடம் மனுவொன்றை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க