தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட இந்த நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டேகொடவிடமிருந்து ருவன் பெற்றுக்கொண்டார்.
உடல் நல குறைவு காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகுவதாக தேசிய புலனாய்வுப்பிரின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் அறிவித்து பதவிவிலகியிருந்தார். முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் சிசிர மென்டிஸ் கடந்த வாரம் நாடாளுமன்ற தெரிவு குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க