அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் எதிர்வரும் 24 – 30 ஆம் திகதிகளுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதனை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராஜாங்க செயலாளர் பொம்பியோ முதலில் இந்தியா சென்று தேர்தலில் மீண்டும் வெற்றி கண்டுள்ள நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அதை தொடர்ந்து இலங்கை வரவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் அமெரிக்காவும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்தே தற்போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க