அரசிலிருந்து அமைச்சுப் பொறுப்புக்களை இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அமைச்சுப் பொறுப்புக்களை இராஜினாமா செய்த முஸ்லிம் தலைவர்களை மீண்டும் அவர்களது பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டிலுள்ள மூன்று பீடங்களின் மாநாயக்கர்கள் கூட்டாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மாநாயக்கர்களும் பதவி விலகிய முஸ்லிம் பிரதிநிதிகளை விரைவில் சந்திக்க தயராகவிருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க