புதியவைவணிக செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

நேற்று (செப்டம்பர் 18) 175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு விடப்பட்டிருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனைக்கு விடப்பட்டிருந்தன.

அத்தோடு 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான உண்டியல்களும் ஏல விற்பனைக்கு விடப்பட்டிருந்தன.

அவற்றுள் 160,989 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க