உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரும் உன்னிச்சை கிராம மக்கள்

யானை வேலியினை சீர்செய்து மின்சாரம் வழங்கி காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிச்சை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு- வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் கடந்த பல மாதங்களாக காட்டு யானைகளினால்  அப்பிரதேச விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் தமது கோரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நேற்று இரவு சில காட்டுயானைகள் எமது பயிர்களையும் பாதுகாப்பு வேலியினையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

பயிர்களை சேதமைந்ததால் விளைச்சலுக்கு முன்னரே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எமக்கு போதிய இலாபம் கிடைக்கவில்லை.
அத்தோடு மாலையானால் கல்விகற்கும் பிள்ளைகள் அச்சத்தில் உரைகின்றனர்.

இப்பிரதேசத்தை அண்டிய காட்டின் எல்லைப்பகுதியில் யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தும்  மின்சாரம் இன்மையால் யானைகள் தங்கு தடையின்றி வந்து செல்கின்றன.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தி யானை வேலியினை சீர்செய்து அதற்கு மின்சாரம் வழங்கி அவற்றிடமிருந்து தமது பயிரையும் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க