உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

படைத்தரப்பினர் செயலிழந்தமைக்கு அரசியல் பிரச்சனையே காரணம்- ரொஹான்

இலங்கையின் படைத்தரப்பினர் கடந்த சில வருடங்களாக வேட்டையாடுபவர்களை வேட்டையாடுபவர்களாக மாறியுள்ளனர்.

இதன் மூலம் அவர்களின் நன்மதிப்பு குறைந்துபோயுள்ளது என்று பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் படையினரை பொறுத்தவரையில் அவர்கள் ஸஹரான் போன்றவர்களை முன்னதாகவே வேட்டையாடியிருக்கவேண்டும்.

எனினும் அவர்கள் தமது தாக்குதல் நடவடிக்கைககளை மேற்கொண்டதன் பின்னரே அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது மீன்கள் வலைகளுக்கு வருவதை பார்த்துக்கொண்டிருப்பதை போன்ற செயலாகும்.

இதற்கு புலனாய்வுத்தகவல்களில் ஏற்பட்ட தொய்வுநிலையே காரணமாகும்.

இதற்கு அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூறவேண்டும் என்று ரொஹான் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களின் பின்னர் படையினர் சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.

எனினும் பயங்கரவாதிகள் மீண்டும் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடும். எனவே புலனாய்வுப்பிரிவினர் கவனமாக செயற்படவேண்டும் என்று குணரட்ன வலியுறுத்தியுள்ளார்.
அமரிக்க, இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் இலங்கைக்கு வந்திருந்தபோது இலங்கையில் உள்ள குழுக்கள் ஐஎஸ்ஸ_டன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்று அறிக்கை தந்திருந்தனர்.

எனினும் ஸஹ்ரான் ஐஎஸ்ஸ_டன் தொடர்புகளை பேணியுள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் அரசியல் தலைமைகளில் ஏற்பட்ட பிரிவினைகளும் பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்புக்களை தகர்த்துவிட்டிருக்கிறது என்றும் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க