இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கான “இலவச வருகைதரு வீசா”(Free Visa on Arrival) சலுகை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த தகவலை வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வருகைதரு வீசா சலுகை, ஐரோப்பிய, அமரிக்க மற்றும் பிரி;த்தானியா ஆகிய நாடுகளுக்கு முதலில் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டம் மே மாதம் முதலாம் திகதி தொடங்கவிருந்தபோதும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் காரணமாக பிற்போடப்பட்டது.
தற்போது இலங்கையில் சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு மாத்திரமே இலவச வருகைதரு வீசா வசதி கிடைத்து வருவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க