உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

செய்தியாளர் க.ப சிவம் மலையகத்துக்காக தம்மை அர்ப்பணித்தவர் என புகழாரம்

மலையகத்தின் வளர்ச்சிக்காக அமரர் க.ப.சிவம் சாதித்தது சாதாரணமான ஒன்றல்ல என பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறை ஓய்வு நிலைப் பேராசிரியர் துரை மனோகரன் தெரிவித்தார்.


மலையகத்தின் மூத்த செய்தியாளரும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் விடிவுக்காக தனது முழு வாழ்நாளையும் அர்பணித்த க.ப.சிவத்தின் இறுதி ஊர்வலத்தின்போது பிரமுகர்கள் பலர் இரங்கல் உரையாற்றினர்


இதில் ஒருவரான பேராசிரியர் துரை மனோகரன், 1960; முதலே மலையக மக்களுக்கு ஒரு முகவரி வேண்டும் என்ற வகையில் “மலைமுரசு” என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து மலையகத்தில் பல்வேறு எழுத்தாளர்களை உருவாக்கியது மட்டும்லலாது அவர்களுக்கு ஒரு எழுத்துலக மேடையையே அமைத்துக் கொடுத்தவர் அமரர் க.ப.சிவமாகும் என்று குறிப்பிட்டார்.

பிரபல எழுத்தாளர் மு. சிவலிங்கம் தமது இரங்கல் உரையில் அரசியல் செய்வதாயின் சமூக அரசியல் செய்ய வேண்டும்.


அதாவது சமூகத்திற்குப் பயன் உள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் குறியாய் இருந்தவர்தான் அமரர் க.ப.சிவம்.


ஒருவனின் ஆயுள் என்பது அவன் வாழ்ந்த காலம் அல்ல. அவன் மற்றவர்கள் மனதில் வாழும் காலமாகும்.

அந்த வகையில் பல நூற்றாண்டுகளுக்கு பலரது மனதிலும் நிலைத்து வாழக்கூடியவர்தான் அமரர் க.ப.சிவம் எனத் தெரிவித்தார்.


இறுதிக்கிரியைகளின்போது சிங்கள ஊடகவியலாளர்கள் சார்பாக ஜே.ஏ.எல்.ஜயசிங்க, கல்வி அமைச்சின் பணிப்பாளர் எஸ்.முரலீதரன், எழுத்ததளர் அந்தனி ஜீவா, கண்டி மாநகர சபை அங்கத்தவர் எம்.பி. விக்னேஷ்வரன்(விஸ்வா), கண்டி மாநகர சபை எதிர்கட்சித்தலைவர் சேன திசாநாயக்கா, கண்டி மாநகர முதல்வர்- கேசர சேனாநாயக்கா, முன்னாள் மத்திய மாகாண சபை அவைத்தலைவர் து.மதியுக ராஜா, கண்டி மாவட்ட நாடாளுமன்ற அங்கத்தவர் வேலு குமார் ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தினர். கண்டி இந்து சிரேஷ்ட் பாடசாலை அதிபர் ச.சிவக்குமார் நன்றி உரையாற்றினார்.

கண்டி நகர வர்த்தகர்கள், நாடாளாவிய எழுத்தாளர்கள், துறைசார் பிரமுகர்களான மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், செய்தியாளர்கள், அரச நிறுவன உயர் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சமயத்தலைவர்கள் என மூவினங்களையும் சேர்ந்த மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இறுதிக்கிரியைகள்- கண்டி மஹய்யாவ இந்து மயானத்தில் நேற்று மாலைஇடம் பெற்றன.

கருத்து தெரிவிக்க