பிரதமர் மோடியை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாகவும் பெரும்பான்மை பெற்று இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற மோடியை நேரில் சந்தித்த போதே இந்த வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
இலங்கையின் பல்வேறு அரச தலைவர்களை சந்தித்துள்ள மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சந்தித்திருந்தார்.
இதன் போது இனப்பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க