உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலக கோரவேண்டும்- ப்ரைடே போரம்

இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்று ப்ரைடெ போரம் என்ற அமைப்பு. இலங்கை மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை சபாநாயகர் தலைமையில் அமைக்கமுடியும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

2020ஆம் ஆண்டு தேர்தல் வரை இந்த இடைக்கால அரசாங்கத்தினால் முன்னோக்கி செல்லமுடியும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நல்லாட்சி ஒன்றுக்கான வாய்ப்பை தவறிவிட்டது உட்பட்ட இனங்களுக்கு இடையிலான மோதல்களுக்கும் இந்த அரசாங்கம் வழிவகுத்துள்ளது.

புதிய அரசியல் திட்டப்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் இல்லாத நிலையிலேயே நாட்டில் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று அந்த அமைப்பு எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.

19வது திருத்தத்தை கொண்டு வந்தபோதும் அதனை உரிய வகையில் நடைமுறைப்படுத்தாமல், இலங்கை தோற்றுப்போன நாடுகளின் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது.
எனவே இவற்றுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலகவேண்டும் என்று கோரியுள்ளது.

இந்த அறிக்கையில் பேராசிரியர் சாவித்ரி, குணசேகர, உட்பட்ட பேராசிரியர்கள். மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க