சினிமா

நடிகை மைனா நந்தினி இரண்டாவது திருமணத்துக்கு தயார்!

பிரபல நடிகை மைனா நந்தினி இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

குடும்பத் தகராறில் மனம் உடைந்து கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், நந்தினி கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நந்தினி நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க