உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இந்திய பிரதமருடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் (Live Update3)

இந்திய பிரதமருக்கும் இலங்கை அரசியல் உயர்மட்டக் குழுவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்த சந்திப்பின் போது, பிராந்திய பாதுகாப்புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

——————————————————————————————————-

மழையுடன் ஜனாதிபதி செயலகம் சென்ற மோடி (Live Update 2)

* கொட்டும் மழைக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

* அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

* ஜனாதிபதி செயலகத்தில் மரக் கன்று ஒன்றை சற்றுமுன்னர் நாட்டினார்.

* ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் சென்றிருந்தார்.

——————————————————————————————————

இந்திய பிரதமர் இலங்கை வந்தடைந்தார் (Live Update 1)

விமான நிலையத்தில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்திய பிரதமரை  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றார்.

அத்துடன்,  இந்திய பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு ஜனாதிபதி இல்லத்தில் இன்னும் சற்றுநேரத்தில் இடம்பெறவுள்ளது.

விருந்தினர் நினைவு பதிவேட்டில் தமது கையொப்பத்தை பதிவு செய்த பின்னர் இந்திய பிரதமர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

59 பேர் அடங்கிய குழுவினருக்கு, மதியம் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் மதிய போசனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க