கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
இதன்படி, குறித்த மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
குறித்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் சட்ட வைத்திய அதிகாரிகளூடாக அரச இரசாயனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள் நேற்றுமுன்தினம் தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க