விளையாட்டு செய்திகள்

நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது இந்தியா

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடரில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான ஆஸ்திரேலியாவை , இந்திய அணி எதிர்கொள்கிறது.

அவுஸ்திரேலிய அணி தனது ஆரம்ப லீக் ஆட்டத்தில் 7 விக்கட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்தியாவையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.

டேவிட் வோர்னர், ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்பி இருப்பது 5 முறை உலக சம்பியனான ஆஸ்திரேலியாவை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.  இந்நிலையில் இந்தியாவுடனான இன்றைய போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க