வடக்கு செய்திகள்

விசுவமடுவில் அமைக்கப்படவிருந்த யானை வேலி திட்டம் நிறுத்தப்பட்டது.

 

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் யானை வேலி அமைப்பதற்கான தொடக்க நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை வனவளத்திணைக்களத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இத்திட்டம், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார் வட்டார வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி இ.டி.கேமஜித் அனுப்பிரிய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கிராம அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ளது.

கனரக இயந்திரங்கள் கொண்டு யானை வேலி அமைப்பதற்கு பாதை அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதிக்கு வந்த வனவளத்திணைக்களத்தினர் காடுகளை அழிக்கவேண்டாம் என தெரிவித்து அதனை நிறுத்தியுள்ளார்கள்.

கல்மடு குளப்பகுதியில் இருந்து இடைக்காடு குளம் வரையிலான 22 கிலோமீற்றர் தூரம் வரையில் யானை வேலி அமைக்கும் இத்திட்டத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க