முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருமுறுகண்டி கிராம அலுவலர் பிரிவில் முதியோருக்கான ஆயுள்வேத வைத்திய முகாம் நேற்று இடம்பெற்றுள்ளது
திருமுறுகண்டி கிராம அலுவலர் ந.ஜெயசுதன் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உடைய உதவிச் செயலாளர் லலித் பண்டார ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் ஆயுள்வேத வைத்தியர் மற்றும் கிராம வெளிக்கள உத்தியோகத்தர்கள் அமைப்புகளின் உடைய உறுப்பினர்கள் வயோதிபர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
இதன்போது வருகை தந்த அனைத்து வயோதிபர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கான ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்பட்டன.
.
கருத்து தெரிவிக்க