உலக கிண்ண கிரிக்கட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவர்கள் மேற்கிந்திய அணிக்கு எதிராக செயற்பட்டதாக அவ்வணி குற்றம் சுமத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் மேற்கிந்திய அணி 15 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் மேற்கிந்திய வீரர் கார்லஸ் பிராத்வெய்ட் நடுவர்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதை சொல்வதால் எனக்கு அபராதம் விதிக்கப்படுமா என்பது தெரியாது. ஆனால் நடுவர்களின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது.
நாங்கள் எங்களுக்குரிய டி.ஆர்.எஸ். வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களது காலுறையில் பந்து படும்போதெல்லாம் அவுட் என்று நடுவர் தீர்ப்பளிக்கிறார். நாம் தொழிநுட்பம் அறியாதவர்கள் அல்லவென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் நடுவர்கள் கிறிஸ் கப்பானி (நியூசிலாந்து), ருச்சிரா பாலியாகுருகே (இலங்கை) ஆகியோர் கண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க