சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற ‘Brain Camp’ என்ற விஞ்ஞான ஆய்வு பயிற்சிக்காக இலங்கையிலிருந்து பங்குபற்றும் குழுவில் யாழ்ப்பாண இந்தக்கல்லூரி மாணவன் தேவானந்த் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
STEP (சிங்கப்பூர் டெக்னோலெஜி எண்வைர்மென்ட் புரோகிராம்) என்ற அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இந்த பயிற்சித்திட்டத்தை நடத்துகின்றன. எதிர்வரும் ஜூன் மாதம் 9 முதல்15 ஆம் திகதிவரை இந்தப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.
10 நாடுகள் பங்குகொள்ளும் இந்த விஞ்ஞான ஆய்வு முகாமில் முதல் முறையாக இலங்கை பங்குபற்றுகிறது. இலங்கைக்குழுவில் 4 பேர் அகில இலங்கைரீதியாக தெரிவாகியுள்ளனர்.
ஒன்பது மகாணங்களிலிருந்தும் விஞ்ஞானத்துறையில் தேசிய மட்டத்தில் அடைவுகளை கொண்டிருந்த மாணவர்களுக்கு பல கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் இவர்கள் தெரிவாகியிருந்தனர்.
வடமகாணத்திலிருந்து செல்லும் குறித்த மாணவர் தேவானந்த் அபிராம் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை சேர்ந்தவராவார்.
கருத்து தெரிவிக்க