துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பிற்கான நிலுவையினை செலுத்தாத பாவனையாளர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று 6ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 1974ஆம் ஆண்டின் இலக்கம் 2ஐக் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சட்ட யாப்பின் இலக்கம் 87(2), 87(6)ம், 87(7) ஐயும் கொண்ட உறுப்புரிமையின் கீழ் குறித்த நிலுவையினை அறவிடுவதற்காக சபையின் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், நீர் கட்டணம் செலுத்தாமையினால் அண்மையில் நீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பாவனையாளர்கள் இன்னும் தமது நிலுவையினை செலுத்தாமல் மட்டக்களப்பு பிராந்தியத்தில் உள்ளனர்.
அவர்களுக்கெதிராகவும், இதன்போது சுட்டிக்கட்டப்பட்டுள்ள சபையின் சட்டவிதிக்கமைய வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
எனவே நீர் பாவனையாளர்கள் தாம் செலுத்த வேண்டிய நிலுவைகளை எதிர்வரும் 14.06.2019ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி அசௌகரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர் நீர் பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு நீர் வழங்கல் திட்டத்தினுள் 253 பேருக்கும், இருதயபுரம் நீர் வழங்கல் திட்டத்தினுள் 117 பேருக்கும், காத்தான்குடி நீர் வழங்கல் திட்டத்தினுள் 353 பேருக்கும், ஆரையம்பதி நீர் வழங்கல் திட்டத்தினுள், 115 பேருக்கும், களுவாஞ்சிகுடி நீர் வழங்கல் திட்டத்தினுள் 168 பேருக்கும், கல்லாறு நீர் வழங்கல் திட்டத்தினுள் 218 பேருக்கும், செங்கலடி நீர் வழங்கல் திட்டத்தினுள் 387 பேருக்கும், வவுணதீவு நீர் வழங்கல் திட்டத்தினுள் 103 பேருக்கும், ஏறாவூர் நீர் வழங்கல் திட்டத்தினுள் 210 பேருக்கும், கல்லடி நீர் வழங்கல் திட்டத்தினுள் 89 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க