வெளிநாட்டு செய்திகள்

சூடான் நாட்டில் நடந்த தாக்குதலிற்கு ஐ.நா.சபை கண்டனம்

சூடான் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

சூடானில் அதிபராக ஓமர் அல் பஷிர் பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். தொடர் போராட்டங்களால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடரந்து இராணுவத்தினருடன் போராட்டக்காரர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.

இந்த போராட்டம் சுமார் ஒரு வார காலம் நீடித்த நிலையில் ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குழந்தைகள் உள்ளிட்ட பலபேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களை அடக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியா கட்டரஸ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.

 

 

 

கருத்து தெரிவிக்க