இலங்கையின் வடக்கில் ஊடகவியலாளர் ஒருவரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த பாதுகாப்பு அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என்று ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
எல்லைக்களற்ற செய்தியாளர் அமைப்பே இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
போர் முடிவடைந்து 10 வருடங்களாகியும் கூட இன்னமும் வடக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த வகையில் கடந்த 27ஆம் திகதியன்று முல்லைத்தீவு கோயில் ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவரின் விடயம் தொடர்பில் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர் கணபதிபிள்ளை குமணனை காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.
அவரின் புகைப்படக் கருவியும் பறிக்கப்பட்டது.
இது இந்த வருடத்துக்குள் இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாகும்.
இந்தநிலையில் குமணன் மீது தாக்குதல் நடத்திய அந்த காவல்துறை அதிகாரியை இலங்கை அதிகாரிகள் தண்டிக்கவேண்டும் என்று எல்லைக்களற்ற ஊடகவியலாளர் அமைப்பு கோரியுள்ளது.
கருத்து தெரிவிக்க