இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக அந்த அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டின் மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வலியுறுத்தல்களையும் தாம் மேற்கொள்ளப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ஊடக சுதந்திரம், பால்சமத்துவம், புறக்கணிப்பு சட்டங்களில் மீள்திருத்தம், போன்ற விடயங்களில் முன்னேற்றம் அவசியமாகிறது.
2018ஆம் ஆண்டைப்பொறுத்தவரை இலங்கையில் இனவன்முறைகள், நல்லிணக்க முயற்சிகளின் மெதுவான முன்னேற்றம் உட்பட்ட விடயங்கள் அவதானிக்கப்பட்டன.
அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபரில் மேற்கொள்ளபட்ட அரசியலமைப்பை மீறும் செயல் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க