சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ணப் போட்டியில் இந்தியா, தென்னாபிரிக்காவை வென்றது

இந்திய கிரிக்கட் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இன்று இங்கிலாந்தில் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிகண்டது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்றது.

இதில் மொரிஸ் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சஹால் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் 4 விக்கட் இழப்புக்கு 230 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தில் வெற்றிகண்டது.

ரோஹிட் சர்மா ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களை பெற்றார்.

கருத்து தெரிவிக்க