மக்கிப் போகக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பாக ஜப்பான் ஆராய்ந்து வருகிறது .
பெருங்கடல்களிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் செயற்பாட்டுக்கென ஜப்பான் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாகவே இதனை ஆராய்ந்து வருகிறது.
மக்கும் பிளாஸ்டிக் பொருள்களால் பெருங்கடலுக்கு ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும். அவை கடலில் கரையும் தன்மை கொண்டிருக்கும் என்பது ஜப்பானின் நம்பிக்கை.
வருடந்தோறும் , சுமார் எட்டிலிருந்து 12 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களில் சேருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அடுத்த மாதம் ஒசாக்காவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க