நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிக்குமார்களின் வார்ட்டிற்கு இன்று காலை மாற்றப்பட்டார்.
ரத்தன தேரருக்கு ஏற்பட்டிருந்த சோர்வு நிலை தற்போது சீரடைந்து வருவதாகவும் அவரது உடல் நிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதாகவும் கண்டி போதனா வைத்தயிசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம். சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவசர சத்திரசிகிச்சை பிரிவிலுள்ள வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமையவே பிக்குமார்களின் வாட்டிற்கு அவர் மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை அல்லது நாளை மறுதினம் அவர் முற்றாக சுகமாகி வைத்தியசாலையை விட்டு வெளியேறுவார் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க