உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

கிழக்கு மாகாண ஆளுநராக ஏ.எஸ்.பி. லியனகே நியமனம்?

கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிற்கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா பல்வேறு சர்ச்சைகளை அடுத்து பதவி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்படலாம் கொழும்பு அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் நியமனங்களின் போது கத்தோலிக்கர் ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையிலேயே கத்தோலிக்கரான ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு அந்த வாய்ப்பு இம்முறை வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாஷவை நியமிப்பதற்கே ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். எனினும், அந்த முடிவு தற்போது பரீசிலிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க