உண்ணாவிரதம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 31ம் திகதி வெள்ளிக்கிழமை தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ரத்தன தேரர் நேற்றைய தினம் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்த பின்னரே அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
4 நாட்களாக தண்ணீர் ஆகாரம் இல்லாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க