கிழக்கு செய்திகள்

பட்டாசு கொளுத்துவதை தவிர்க்கவும் -ஏறாவூர் நகரசபை அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் பட்டாசு கொளுத்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஏறாவூர் நகர சபையின் உப தலைவர் எம்.எல். றெபுபாசம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விடுத்த கோரிக்கையில், நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர் தற்போது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மனதில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஏறாவூர் நகர பிரதேச பிரிவில் பட்டாசு கொளுத்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெருநாள் கொண்டாட்டங்கள், களியாட்ட நிகழ்வுகள் என்பனவற்றின்போது இந்த விடயங்களை அனுசரித்துப் போகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சமகால பாதுகாப்புக் கெடுபிடி நிலைமைகளில் அது வீணான தொல்லைகளுக்கும் அச்ச நிலைக்கும் வழிவகுக்கும் என்பதால் இத்தகைய தீர்மானத்தை ஏறாவூர் நகர சபை அமர்வில் நிறைவேற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க