உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் ஜனாதிபதியே! – பூஜித் ஜயசுந்தர

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை தவிர்த்திருக்க முடியாமல் போனமைக்கு பொறுப்பு கூறவேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என பொலிஸ் மா அதிபர் பதயிலிருந்து விடுப்பு வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முழு பொறுப்பு கூறவேண்டியது ஜனாதிபதி எனவும், இஸ்லாம் அடிப்படை வாதம் தொடர்பில் தாம் மேற்கொண்டிருந்த விசாரணைகளை புலனாய்வுப்பிரிவு நிறுத்தும்படி கட்டளையிட்டதாகவும், புலனாய்வுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு ஆகியன ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ளது எனவும் பூஜித் ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டு செய்தி ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க