அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த கட்சியின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமும் இதன் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலை தொடருமாக இருந்தால் சமூகத்தில் நிலவும் சமாதான சூழ்நிலை இல்லாமல் போக வழியேற்படும் எனவும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநர்கள் தொடர்பிலும், அமைச்சர் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க