உள்நாட்டு செய்திகள்புதியவை

இன – மத வாதத்தை துடைத்தெறிய வேண்டும்: நஸீர் அஹமட்

இளைஞர் சமுதாயம் இணைந்து இன, மத வாதத்தை துடைத்தெறிய வேண்டும் என தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் கிளை பயிற்சி நிலையத்தை நேற்று 1ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இனவாதம் மதவாதம் என்பது நாட்டுக்குக் கேடானது. ஒரு சில இனவாத அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இனவெறுப்பை ஏற்படுத்துவதையும் அடுத்த சமூகத்தாரை அகௌரவப்படுத்துவதையும் நாம் நிறுத்தியாகவேண்டும் எனவும் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் அதிகாரிகள், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. யூசுப், ஏறாவூர் நகர சபை உப தவிசாளர், ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் தவிசாளர், நகர சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் பயிலுநர்களும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க