அரசாங்கத்துக்கு நாளை மதியம் 12 மணிவரை காலக்கெடு வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஞானசார தேரர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தாங்கள் வழங்கியுள்ள கால எல்லைக்குள் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அனைத்து பிக்குமாரும் களத்தில் இறங்குவார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அதுரெலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டி நகரின் கடைகள் இன்று மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க