உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சர்ச்சைக்குரிய வைத்தியர் ஷாபி. குழந்தைகளை மாற்றிக்கொடுக்க முயன்றார்?

இலங்கையின் வைத்தியதுறையில் இன்று சர்ச்சைக்குரியராக பேசப்படும் வைத்தியர் செய்கு சியாப்டீன் மொஹமட் ஷாபியின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தாய் ஒருவருக்கு பிறந்த குழந்தை ஒன்றின் ஆவணங்களை மாற்றி அந்தக்குழந்தையை இன்னும்ஒருவருக்கு கைளிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டே அதுவாகும்.

சுமார் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு ஷாபி மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நூற்றுக்கணக்கான பெண்கள் தமது முறைப்பாடுகளை குருநாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் பதிவுசெய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டுக்கு மத்தியிலேயே இந்த குழந்தையை மற்றும் ஒருவருக்கு மாற்றிக்கொடுக்க முயன்ற குற்றச்சாட்டும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வைத்தியர் ஷாபி கடந்த தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியபோது அரச தொழிலை விட்டு விலகினார். எனினும் அவர் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டமை தொடர்பி;ல் விசாரணை வேண்டும் என்று வடமேல் மாகாண முன்னாள் கல்வியமைச்சர் சந்தியாகுமாரி ராஜபக்ச. கையூட்டல் மற்றும் ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க