மட்டக்களப்பு ஓட்டமாவடி கல்குடாவில் வெளிநாட்டு நிதியுதவியுடன் அமைக்கப்படவிருந்த தனியார் பல்கலைக்கழகத் திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதியம் இதற்காக 20 ஏக்கர் காணியை ஒதுக்கியிருந்தது.
எனினும் இந்த திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
இந்தக்காணி இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதற்காக ஒதுக்கப்படவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது திட்டப்படி இந்த இடத்தில் அனைத்து சமூகங்களுக்குமான தொழிற்பயிற்சிக்கல்லூரி ஒன்றை அமைப்பதாக இருந்தது என்று ராஜாங்க அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ், பொலநறுவை எல்லையில் அமைத்திருந்த “ஷரியா” பல்கலைக்கழகமும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க