உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இடைநிறுத்தம்:அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ ஆடை சுற்றுநிருபம்.

அரச அலுவலர்களுக்கான உத்தியோகபூர்வ பொதுஆடை தொடர்பான சுற்றுநிருபம்; இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது

பொது நிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

கடந்த 30 வருடங்களாக நடைமுறையில் உள்ள அரச அலுவலர்களுக்கான உத்தியோகபூர்வ ஆடையில் மாற்றம் கொண்டு வருவதென்று கடந்த வார இறுதியில் அரசாங்கத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி பெண்கள் “சேலை” அல்லது “ஓசாரி” ஆகிய ஆடைகளை அணியவேண்டும்.

ஆண்கள் அலுவலக ஆடை அல்லது தேசிய ஆடையை அணியவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட்ட அமைப்புக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்தே இந்த தீர்மானம் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள அரசாங்க நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் தீர்மானம எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க