சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆய்வு உபகரணங்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா 

அடுத்து வருகின்ற இரண்டு வருடங்களில் ஆய்வு உபகரணங்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அழைத்து செல்ல நாசா திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி நிலவில் உபகரணங்களை தரையிறக்குவதற்கான விசேட லேண்டர் வாகனங்களை தயாரிப்பதற்கென ஆஸ்ட்ரோபோட்டிக், இண்டூவ்டைவ் மெசின்ஸ் மற்றும் ஓர்பிட் பியோன்ட்  ((Astrobotic, Intuitive Machines and Orbit Beyond)) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வடிவங்களில் லேண்டர்களை தயார் செய்யும். அவை அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் நாசாவின் 23 உபகரணங்களை நிலவுக்கு  கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Attachments area

கருத்து தெரிவிக்க