ஞானசார தேரருக்கு ஹோமகம நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் 22ஆம் திகதிக்கு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க