கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு பயண ஆவணங்களுக்கான கட்டணத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, சாதாரண சேவை 500 ரூபாவால் அதிகரித்து 3,500 ரூபாவாகவும் 16 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கான வெளிநாட்டு பயண ஆவண கட்டணமாக 5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், ஒரு நாள் சேவை 10,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாவாகவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டில் உள்ள பெயரை மாற்றுவதற்கான கட்டணமாக 1,000 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகரிப்பு 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமைக்கு அமைய அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க