உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

என்னால் முடியாததை என்மகன் செய்வார்! – ராஜித்த

தமது மனசாட்சிக்கு இசைவாக தாம் நாட்டிற்கு சேவை செய்து வருவதாக அது மக்களுக்கு தெரிவதற்கு கொஞ்ச காலம் எடுக்கும் எனவும் தன்னால் முடியாத சேவையை தனது மகன் சத்துர சேனாநாயக்க செய்வார் என தாம் நம்புவதாக அமைச்சர் ராஜித்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் உப தலைவர் பதவிக்காக இரண்டாவது தடவையாக நியமிக்கப்பட்டதற்காக ஜெனிவா சென்று இன்று அதிகாலை நாடு திரும்பும் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தம்மால் ஆரம்பிக்கப்பட்ட இருதய நோயாளர்களுக்கான இலவச சிகிச்சை வழங்குதல் 1700 சுவதிவி மற்றும் சுவநாரி மத்திய நிலையங்களை ஆரம்பித்தல் போன்ற வேலைத் திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நடைமுறைப்படுத்தியதாக தெரிவித்த அமைச்சர் இலங்கையில் சுகாதார சேவையில் அபிவிருத்தி தொடர்பான விளம்பரங்கள் குறைவாக காணப்பட்டபோதிலும் இந்திய பிரதமர் அவரது செயற்பாடுகள் குறித்து தேவையான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது வரிய மக்களுக்கு வழங்கிய சிறந்த சேவையே ஆகும் என தெரிவித்த அமைச்சர் இனவாதத்தை விட அந்த சேவையே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இதேவேளை, சுகாதாரத் துறையில் நான் செய்த சேவைகளை அரசியல் ரீதியாக பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். அரசாங்கத்தையும் தாக்குகிறார்கள். உலக சுகாதார சங்கத்தினால் இவ்வாறானதொரு பதவியை வழங்குவது அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் அல்லவென அவர் சுட்டிக்காட்டினார். 35 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உப தலைவர்கள் மத்தியில் முதலாவது உப தலைவராக தான் தெரிவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க