அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பதவி விலக வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்டம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர் ரிஷாட் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன உட்பட்ட பலர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதம் குறித்து பல தரப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதால் அமைச்சர் ரிஷாட்டை பதவி விலகுமாறு கேட்க ஜனாதிபதி தரப்பும் தயாராகி வருகிறது.
கருத்து தெரிவிக்க