உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் யானைக்குட்டி போராட்டத்தின் பின்னர் மீட்பு

வவுனியா. கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த 6மாதமான யானைக்குட்டி ஒன்று இன்று பிற்பகல் 3மணிவரையான 7மணிநேரப் போராட்டத்தின் பின்னர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பெரியகுளம் ஆயுள் வேத வைத்தியசாலை அமையும் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் யானைகுட்டி ஒன்று நேற்று இரவு தவறி வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8மணியளவில் யானைக்குட்டியை மீட்கும் போராட்டத்தில் கனகராஜன்குளம் பொலிசார், வவுனியா மற்றும் கிளிநொச்சி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கிணறு அகழப்பட்டு கிணற்றிலிருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் மிருக வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தேக ஆரோக்கியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பிற்பகல் 3.30மணியளவில் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தண்ணீர் தேடி மக்கள் குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த யானைகுட்டியே இவ்வாறு கிணற்றிற்குள் தவறி வீழ்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க