கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து விலக்கவேண்டும் என்றக்கோரிக்கைக்கு காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலைமையிலான குழு இந்த காலக்கெடுவை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.
எதி;ர்வரும் 30ஆம் திகதிக்குள் அவர்கள் இருவரையும் பதவிவிலக்காது போனால் பாரிய நடவடிக்கை ஒன்றுக்கு செல்லப்போவதாக ரத்தன தேரர் இன்று ராஜகிரியவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதற்கிடையில் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆளுநர் பதவிக்கு மேலதிகமாக கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக்களுக்கான இணைத்தலைவர் பதவியும் ஜனாதிபதியினால் நேற்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க