புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை – அவுஸ்திரேலிய பயிற்சிப் போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் பயிற்சிப் போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது. சவுதம்டன், த ரோஸ்போல் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதன் நிமித்தம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்றைய தினம் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்தப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மாலிங்க கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மைதானப் பகுதியில் மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னரான தென் ஆபிரிக்காவுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க