தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 ஆவது தேசிய விளையாட்டு விழா இம்முறை இடம்பெற இருக்கின்றது
அந்த வகையில் 31 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட விளையாட்டு விழாக்களின் உடைய பெருவிளையாட்டுக்களில் கபடி மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இன்று ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்தபோட்டிகளில் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் துணுக்காய் பிரதேச செயலகபிரிவு அணி இரண்டாம் இடத்தையும் மணலாறு பிரதேச செயலக பிரிவு அணி முதலாமிடத்தையும் பெற்றிருக்கின்றது
அதேபோன்று ஆண்களுக்கான கபடி போட்டியில் இரண்டாம் இடத்தை மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவு அணியும் முதலாம் இடத்தினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவு அணியும் பெற்றுக்கொண்டிருக்கிறது
தொடர்ந்து ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியும் பெண்களுக்கான கபடி போட்டியும் மைதானத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
கருத்து தெரிவிக்க