உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்று, வவுனியா தமிழ் மகாவித்தியாலய அதிபர் பதவிவிலகல்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாணவி ஒருவரை காவலாளி பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பெற்றோர் மற்றும் பழையமாணவர்கள் இன்று இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் அதிபர் தனது பதவியில் இருந்து விலகிச்செல்வதாக பொதுச்சபையில் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம் இன்று முற்பகல் 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அதிபர் த. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையில் அண்மையில் மாணவி ஒருவரை, காவலாளி பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டுஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்;டது.


எனினும் காவலாளி தொடர்ந்தும் பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் அதற்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இதன்போது சபையில் அனைவரும் குழப்பமடைந்து அதிபருக்கு எதிராக கோசமெழுப்பிய நிலையில் பெண் ஆசிரியர்கள் பலரும் ஆண் ஆசிரியர்கள் சிலரும் அதிபருக்கு ஆதரவாகவும் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு ஆதரவாகவும் கோசங்களை குரல் எழுப்பியவாறு சபையின் நடுவே வந்தனர்.

இதன் போது ஆசிரியர்களுக்கு எதிராகவும், பாடசாலைக்கு மாணவிகளை அனுப்புவதற்கு அச்சம் கொள்வதாகவும் தெரிவித்து பெற்றோர் கோசங்களை எழுப்பியதுடன்;, அதிபரையும் வெளியேறுமாறும் அதிபரை பதவியில் இருந்து விலகுமாறும் கோரினர்.

இந் நிலையில் அதிபர் ஊஊவுஏ பதிவில் குறித்த சம்பவம் பதிவில் இருந்த போதிலும் மாணவியும் அவரின் பெற்றோரும் சட்ட நடவடிக்கைக்கு உடன்படவில்லை என தெரிவித்து தான் காவல்துறையிலோ ஏனைய இடத்திலோ முறையிடவில்லை என தெரிவித்தார்.

அத்துடன் இனி தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும் பெற்றோர் அதிபரின் செயற்பாடு பிழை எனவும் காவல்துறையிடம் முறையிட்டு காவல்துறையே நடவடிக்கை எடு;த்திருக்கவேண்டும் என தெரிவித்தனர்.
எனவே அதிபரே முதல் குற்றவாளியெனவும் அதிபருக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்களும் குற்றவாளிகளே என தெரிவித்து சபையில் நியாயத்தினை கேட்டு நின்றனர்.

இந் நிலையில் பாடசாலையில் பல பண மேசாடிகள் இடம்பெறுவதாக பழைய மாணவர்கள் சங்கத்தால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை முதலில் ஏற்றுக்கொண்ட அதிபர் தான் அதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் குழு நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது தான் இன்றில் இருந்து அதிபர் பதவியில் இருக்கப்போவதில்லை எனவும் தான் பதவியில் இருந்து விலத்துவதாகவும் தெரிவித்து சபையில் இருந்து வெளியேறினார்.

இதன்போது பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிலர் அதிபரின் முடிவை வரவேற்றனர்.

புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து அவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தனர்.

கருத்து தெரிவிக்க