உள்நாட்டு செய்திகள்

சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுக்க பிரதமர் களத்தில்

21/4 தாக்குதலையடுத்து விடுக்கப்பட்ட  இலங்கைமீதான பயண எச்சரிக்கையை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு பிரதமர் விரிவாக விளக்கமளித்தார்.

ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களையடுத்து, இலங்கைக்கு சுற்றுலாச்செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு வெளிநாடுகள் பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க