உள்நாட்டு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பா.ஜ.க. வெற்றிநடை – மோடிக்கு குவியும் வாழ்த்துகள்

இந்தியா முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 326 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில் பா.ஜ.க. மட்டும் 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்நிலை நீடித்தால், பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதனால், பா.ஜ.க. தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை, தமிழகத்தில் திமுக வெற்றிநடைபோட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க