உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு எதிரான வழக்கு – 19 இல் விசாரணை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விசேட  மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினம் சாட்சியாளர்கள் நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டீ. ஏ. ராஜபக்ச  நினைவுத் தூபி மற்றும்  நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதி முறைகேடாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது என  குற்றம் சாட்டப்பட்டு கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது,  மருத்துவப் பரிசோதனைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை கோட்டாபய ராஜபக்ச  சிங்கப்பூருக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறு கோட்டாவின் சட்டத்தரணி அலி சப்ரி கோரிக்கை விடுத்தார். இதற்கு அரச தரப்பு சட்டத்தரணியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

 

 

கருத்து தெரிவிக்க