அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 6, 7 ஆம் திகதிகளில் விவாதம் நடத்துமாறு இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 18, 19 ஆம் திகதிகளிலேயே விவாதம் நடத்த முடியும் என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்கு கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. இதனால் இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளது.
எனினும், அரசாங்க தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ள மேற்படி திகதிகளிலேயே விவாதம், வாக்கெடுப்பு நடைபெறும் என தெரியவருகின்றது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது விவாதம் நடத்தப்பட வேண்டிய திகதியை நிர்ணயிப்பதற்காக, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கருத்து தெரிவிக்க